ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது 2019-ன் இந்திய பதிப்பின் வெற்றியாளர்களை நிப்பான் பெயிண்ட் அறிவித்துள்ளது. கட்டப்பட்ட சூழல் அமைப்பின் எதிர்காலத்தை மேம்பட மாற்றி அமைக்கும் ஒரு முயற்சியாக "முன்னோக்கி : ஒரு நிலைப்புத்தன்மையுள்ள எதிர்காலம்" என்ற போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 21 மாணவர்கள் இறுதிச்சுற்றில் போட்டியிட்டு ஒவ்வொரு பகையின் அதிலிருந்தும் (உட்புற வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை) ஒரு தங்க வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் நடுவர்களாக கட்டிடக்கலை நிபுணர்கள் ஸ்வன்ஜால் காக் கபூர். ஷப்னம் குப்தா, யூஜின் பண்டாரா, அருண் கார்த்திக் மற்றும் சி.ஆர். ராஜு பணியாற்றினார். AYDA நிகழ்வு 15 நாடுகளில் நடத்தப்படுகிறது.