ஆம் ஆத்மி சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகவ் சத்தா. அவர் நம்மிடம் பேசுகையில், “எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே, நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன். மோடி மற்றும் அமித்ஷா தலைமையிலான ஜனநாயக விரோத சக்திகளின் ஆட்சியை இந்த தேர்தலின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என நான் நம்புகிறேன்” என்றார்.