தவறான தகவல்களை அளிக்கிறது பாகிஸ்தான்: முப்படை அதிகாரிகள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் முப்படை கூட்டு மாநாட்டில் பாகிஸ்தானின் எந்தவொரு நடவடிக்கைக்கும், இந்தியா உடனடி பதிலளி கொடுக்க முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. தவறான பல தகவல்களை பாகிஸ்தான் அளித்து வருகிறது. அவர்கள் நம்மை தூண்டிவிட்டால், நாம் எதற்கும் தயாராக இருக்கிறோம் என மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.