சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளராக நீண்ட இழுபறிக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் எச். ராஜாவை கார்த்தி சிதம்பரம் எதிர்கொள்கிறார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதுவை மற்றும் தமிழகத்தில் மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.