காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிளா மட்டோண்கர்

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்மிளா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது மகாராஷ்டிர காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாத்துறை மற்றும் அரசியல் குறித்து பேசிய ஊர்மிளா, ''சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது, பிரபலம் காரணமாக அவர்கள் வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என்ற பேச்சு உள்ளது. நான் அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார். மும்பையில் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 29 முதல் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளா போட்டியிட்டால் அவர் பாஜகவின் பலம் மிக்க வேட்பாளரான கோபால் ஷெட்டியை எதிர்கொள்வார்.

Related Videos