விண்ணிற்கே இந்தியா பாதுகாவலனாக இருக்கும் போது, உலகமே நம்மை திரும்பி பார்க்கும் போது, நாம் அனைவரும் நமது விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்ளும் போது, ஒரு சிலர் எப்போதும், எதையும் கேள்வி எழுப்பி, இது போன்ற சாதனைகளையும் அவமானப்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், இது போன்று அவர்கள் கேள்வி எழுப்புவதன் மூலம் நமது விஞ்ஞானிகளையும், ராணுவ வீரர்களையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு வேண்டுமா? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? உங்களுக்கு பலமான அரசு வேண்டுமா? அல்லது பலவீனமான அரசு வேண்டுமா என கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பலமான அரசு என ஒரு சேர பதில் குரல் அளித்தனர்