மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். மோடி, சிலிகுரி மற்றும் கொல்கத்தாவில் பிரசாரம் செய்ய உள்ளார். மம்தாவின் பிரசாரம்தான் இன்றைய நாளில் கடைசியாக முடிவடைகிறது. எனவே, அவர் மோடியின் கருத்துக்கு, பதில் கருத்து கூறும் வகையில் பிரசாரம் அமையும் எனப்படுகிறது.