மேற்கு வங்காளத்தில் மோடி தேர்தல் பிரச்சாரம்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ''மேற்கு வங்க வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கராக இருப்பவர் மம்தா. மத்திய அரசின் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை மேற்கு வங்கத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா தடுக்கிறார். ஏழைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை மாநிலத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா இடையூறு செய்கிறார்'' என்று பேசினார்.