தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதித்யநாத், 'மோடியின் ராணுவம்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பேசி 5 நாட்களை கடந்த நிலையில் நேற்றைய தினம் யோகியின் பேச்சை கண்டித்த தேர்தல் ஆணையம், ' வருங்காலங்களில் கவனமாக பேசுங்கள்' என்று அறிவுரையும் வழங்கியுள்ளது. கடந்த ஞாயிறன்று உத்தரபிரதேசம் காஸியாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள், ஆனால், மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே வழங்குகிறார் என்று கூறியிருந்தார்.