ஜெய பிரதாவை தகாத வார்த்தையில் விமர்சித்த அசாம் கான்

சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவரான அசாம் கான், நடிகை மற்றும் அரசியல்வாதியான ஜெயபிரதாவை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பல தரப்பினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அசாம் கானை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.