அசாம்கர்: அகிலேஷ் யாதவ் - போஜ்புரி ஸ்டாருக்கும் இடையில் போட்டா போட்டி!

உத்தர பிரதேச அசாம்கர் தொகுதியில் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த முறை போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இருந்து அவரின் தந்தை முலாயம் சிங் யாதவ், பல முறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அகிலேஷுக்கு எதிராக போஜ்புரி திரை நட்சத்திரம் தினேஷ் லால் நிரவ்வா, பாஜக சார்பில் மல்லுக்கட்டுகிறார். இந்த இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகிலேஷுக்கு இந்த முறை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் பலமும் இருக்கும் என்பதால், நிரவ்வா தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்தான் எனப்படுகிறது.