பிரதமர் மோடி வாக்களித்தார்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அஹமதாபாத்தில் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் எனது வாக்கினை போட்டுவிட்டேன். என்னுடைய ஜனநாயக கடமையை செய்துவிட்டேன். அனைவரும் வாக்களிக்க வேண்டும். இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்துக்கு நாம் வாக்களிப்பது அவசியமாகும்’ என்று பேசினார்.