காங்கிரஸ் மூத்த நிர்வாகி திக்விஜய சிங்குடன் நேர்காணல்

மத்திய பிரதேச போபாலில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி திக்விஜய சிங் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக-வின் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார். போபாலில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நாம் அவரோடு பேசினோம். ‘இந்து தீவிரவாதம் என்று வார்த்தையை எப்போதும் சொன்னதில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை. நான் இந்து மதத்தை பின்பற்றும் இந்து. பிறகு எப்படி நான் இந்துக்களுக்கு எதிரானவனாக இருப்பேன்’ என்றார்.