மேற்கு வங்காளத்தை தாக்குகிறது ஃபானி புயல்

தீவிரப் புயலான ஃபனி, கொல்கத்தாவின் வடமேற்கே 60 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது வலுவிலந்து இன்று பிற்பகல் மேற்குவங்கம் நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது. ஒடிசாவில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். 11லட்சம் பேர் ஒடிசாவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

Related Videos