மத்திய டெல்லி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை செலுத்திய பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர், “பிரதமர் மோடி, வெறுப்பை முன் வைத்து பிரசாரம் செய்தார். நாங்கள் அன்பை முன் வைத்துப் பிரசாரம் செய்தோம். அன்புதான் கடைசியில் வெல்லும். மக்கள்தான் எங்களது எஜமானர்கள். அவர்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்” என்று பேசினார்.