பிரக்யா அளித்த பேட்டியில், நான்பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீதுமுழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடையநிலைப்பாடு. நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்என்று நான் கூறியது எனதுதனிப்பட்ட கருத்தாகும், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி யாரையேனும் எனது கருத்து காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த எதையும்மறக்க முடியாது. எனது கருத்துக்கள் ஊடகங்களால்திரித்து கூறப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.