கோட்சே குறித்த கருத்துக்கு கமல் பேட்டி

சர்ச்சைகளுக்கு இடையே சென்னை விமானநிலையத்தில் இன்று காலை மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதமர் மோடிக்கு நான்பதில் சொல்ல மாட்டேன், சரித்திரம்பதில் சொல்லும், எல்லா மதத்திலும் தீவிரவாதிகள்இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் சரித்திரம் காட்டுகிறது. வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால் யாரும், யாரையும் குறைசொல்லலாம். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒருஇந்து என்று நான் கூறியகருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் ஏற்கனவே சென்னைமெரினாவில் கூறிய கருத்தைத்தான் அரவக்குறிச்சியிலும்கூறினேன், மெரினாவில் பேசியதை பெரிதுப்படுத்தாதவர்கள் அறவக்குறிச்சியில் பேசியதைபெரிதுப்படுத்திவிட்டார்கள். நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்துக்கள் யார்? ஆர்எஸ்எஸ் யார்என்று பிரித்து பார்க்க வேண்டும். நான்பேசியதால்தான் மகாத்மா காந்தி பற்றிமேலும் பல நல்ல நல்லகருத்துகள் வெளிவருகின்றன. சமூக பதற்றம் உருவாகவில்லை, உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Videos