மோடி சந்திப்பு குறித்து ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பதில் அளித்தனர். பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு நடந்த அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இது ஒரு நல்ல துவக்கம். இது நல்ல விஷயம் நான் பிரதமர் வேட்பாளரா என்று பலர் கேட்கின்றனர். அது குறித்து நான் தற்போதைக்குப் பேச மாட்டேன். காரணம், இன்னும் தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. மக்கள் தீர்ப்பளித்த பின்னர் அது குறித்து நான் பேசுவேன்.