மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இஸ்லாமாபூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வடக்கு கொல்கத்தாவில் பா.ஜ.க. வேட்பாளர் ராகுல் சின்ஹா, திரிணமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு செய்தியாளரும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.