உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாந்தாலி கிராமத்தில் உள்ள பெண்கள் வாக்குப்பதிவு செய்ய வரவேண்டாம் என்றும் அதற்காக அவர்கள் கைகளில் நேற்றே மை வைத்துவிட்டு ரூ.500-ஐ பாஜக ஆதரவாளர்கள் கொடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கிராமவாசிகள் உள்ளூர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.