மேற்குவங்க முதல்வர் சமநிலையை இழந்துவிட்டார்: கைலாஷ் விஜய்பர்கியா

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்த கைலாஷ், மேற்கு வங்காளத்தில் குறித்து கூறினார். அப்போது, அந்த மாநிலத்தில் ஜனநாயகம் இல்லை, அரசியலமைப்பு இல்லை. அங்கு முதலமைச்சர் உயர் அழுத்தத்தால் விரக்தி அடைந்துள்ளார், அவரது மன சமநிலை சரியில்லை. ஈஸ்வர் வித்யாசாகரின் சிலை விவகாரத்தில் பாஜக மீது வீண் பழி சுமத்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

Related Videos