தோல்விக்கு பின் சில முடிவுகளை எட்ட கூட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கூட்டம்!

தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததற்கு பிறகு, காங்கிரஸின் தலைமை தன் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரல் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும், பல மாநில நிர்வாகிகள் மற்றும் சில மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி தன் ராஜினாமா கடிதத்தை செயற்குழுவில் சமர்ப்பித்தார் எனவும் கூறப்படுகிறது.