பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தாண்டு இறுதிக்குள் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வருவார் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று வருகின்றன. இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.