இன்று சர்வதேச யோகா தினம், ரான்சியில் நடந்த மிகப்பெரிய நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி

இன்று சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரான்சியில் ஒரு மிகப்பெரிய யோகா நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். காலை மூன்று மணிக்கே இந்த நிகழ்ச்சிக்கான வருகை துவங்கிய நிலையில், 30,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சென்ற ஆண்டு யோகா தினத்தன்று பிரதமர், டேராடூனில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Videos