உலகக்கோப்பை 2019: வெற்றியுடன் துவங்கிய பயணத்தை துவங்கிய இந்திய அணி!

இந்த உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியை இந்திய அணி நேற்று விளையாடியது. தென் ஆப்ரிக்காவுடன் மோதிய இந்த போட்டியில், ரோகித் சர்மாவின் 23வது சதத்தை தொடர்ந்து, இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. 228 ரன்கள் இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்திருந்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 227 ரன்களை குவித்திருந்தது. இந்தியா சார்பில் சகால் 4 விக்கெட்களை கைப்பற்றி நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.

Related Videos