கொல்கத்தாவில்பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்குவங்கத்தில்அரசு மருத்துவமனையில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களை சந்தித்த பின் மருத்துவர்களை எண்ணி பெருமை கொள்வதாக மம்தா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.