உலர் கண்கள் என்பது கண்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையாகும். இயல்பாக கண்கள் போதுமான ஈரப்பதத்தினை மீபோமியன் சுரப்பி மூலமாக உருவாக்குகின்றன. ஆனால், இந்த சுரப்பி செயலிழக்கும் போது உலர் கண் பிரச்னை உருவாகின்றது. கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணரும், கோயம்புத்தூரின் கண் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் டி.ராமமூர்த்தி, மிபோமியன் சுரப்பி செயலிழப்பு குறித்த சில நுண்ணறிவுகளுடன் வறண்ட கண்ணைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி பேசுகிறார்