தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் அமராவதி வீட்டைச் சுற்றி ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்பகுதியில் வெள்ள நிலைமையைக் கண்காணிக்க ட்ரோன்கள் பறக்கவிட்டதாக மாநில அரசு கூறிக் கொண்டாலும், முன்னாள் முதலமைச்சரின் வீட்டில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கண்காணிப்பு நடத்தியதாக தெ.தே.க குற்றம் சாட்டியுள்ளது.