உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டிற்கான கும்பமேளா நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் இணையும் சங்கத்தில் புனித நீராட உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த புனித நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு பிரயாக்ராஜின் ‘லேதே அனுமான்’ கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது என்பது விருப்பமானதாக இருக்கிறது. இந்த ஆலயத்தில் 20 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பிரமாண்ட அனுமான் சிலை நிறுவப்பட்டுள்ளது. கங்கை நீர் உயர்ந்து, கோயிலில் உள்ள அனுமான் சிலையின் கால் பகுதியைத் தொடும் என்று நம்பப்படுகிறது.