மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மம்தா, ‘பிரதமர் மோடி, என்னுடன் விவாதத்தில் ஈடுபடத் தயாரா. மேற்கு நாடுகளில் இதைப் போன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டிலும் அப்படி நடைபெற வேண்டும்’ என்றார்.