பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது மரண தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவில் மரண தண்டனை வழங்கிய தீர்ப்பை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவுக்கும், குல்பூஷன் ஜாதவுக்கும் ஆதரவான தீர்ப்பு வந்துள்ளதால் அவரது மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது.