காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜர் கோயிலில் அத்தி வரதர் விழா நடந்து வருகிறது. இதில் காவலரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, 'என்ன ஸ்டேஷன் நீ? எந்த ஸ்டேஷன்?' என்று கேள்வி கேட்கிறார்.